Connect with us

அயலான், கேப்டன் மில்லர் படத்துக்கான FDFS Show எப்போது தொடங்கும் தெரியுமா?! அரசு பிறப்பித்த உத்தரவு!

Cinema News

அயலான், கேப்டன் மில்லர் படத்துக்கான FDFS Show எப்போது தொடங்கும் தெரியுமா?! அரசு பிறப்பித்த உத்தரவு!

கடந்தாண்டு பொங்கலில் விஜய்யின் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு படங்கள் ஒரேநாளில் களமிறங்கின. விஜய் – அஜித் படங்கள் ஒன்றாக திரைக்கு வந்தது ரசிகர்களிடம் பெரிய ஹைப் கொடுத்திருந்தது. அதேபோல், இந்தாண்டு தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரும் பொங்கல் ரேஸில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதன்படி சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் படங்கள் வரும் 12ம் தேதி வெளியாகின்றன.

F621m-Ba0AAaiLf

உலகம் முழுவதும் வெளியாகும் இந்த இரண்டு படங்களின் டிக்கெட் புக்கிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிகாலை 4 மணி FDFS காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என இருதரப்பு ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தனர். ஏனெனில் கடந்தாண்டு அஜித்தின் துணிவு FDFS பார்க்க ரோஹிணி தியேட்டர் சென்றிருந்த ரசிகர், லாரியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின்னர் தமிழ்நாட்டில் வேறு எந்த படங்களுக்கும் அதிகாலை 4 மணி FDFS-க்கு அனுமதி கிடைத்தது இல்லை.

கடந்தாண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர், விஜய் நடிப்பில் ரிலீஸான லியோ படங்களுக்கும் அதிகாலை 4 மணி FDFS-க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கும் 4 மணி FDFS-க்கு அனுமதி கிடைக்கவில்லை. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, காலை 9 மணி சிறப்புக் காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது. இதனால், அயலான், கேப்டன் மில்லர் இரண்டு படங்களுமே காலை 9 மணிக்கு தான் வெளியாகின்றன.

அதேநேரம், 12 முதல் 18ம் தேதி வரை தினமும் 5 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சிகள் தொடங்கும் எனவும், நள்ளிரவு 2 மணிக்குள் கடைசி காட்சி முடிந்துவிட வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கான மாநிலங்களில் காலை 6 மணிக்கு திரையிடப்படவுள்ளன. இதனால், தானுஷ், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

முன்னதாக விஜய்யின் லியோ படத்துக்கும் இதேபோல் தான் தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அயலான், கேப்டன் மில்லர் படங்களின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்துவிட்டதாக படக்குழுக்கள் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர். அயலான் படத்தை பார்த்த சிறப்பு விருந்தினர்கள், இதைவிட பெஸ்ட் கிராபிக்ஸ் தமிழ் சினிமாவில் வந்தது இல்லை என பாராட்டி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிவகார்த்திகேயன் தயாரிக்கும் குரங்கு பெடல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!!

More in Cinema News

To Top