Connect with us

“ நடிகை த்ரிஷா மீது நான் தான் அவதூறு வழக்கு தொடர வேண்டும் ” – மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி

Cinema News

“ நடிகை த்ரிஷா மீது நான் தான் அவதூறு வழக்கு தொடர வேண்டும் ” – மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி

நான் பேசாததை பேசியதாக கூறியதற்கும் என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கும் நான் தான் நடிகை த்ரிஷா மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டு ரேப் காட்சிகளில் நடித்ததை போல் த்ரிஷாவுடனும் நடிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் முடியாமல் போனது என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது இனையத்தில் வேகமாக பரவிய நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் இச்சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் :

நான் பேசாததை பேசியதாக கூறியதற்கும் என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கும் நான் தான் நடிகை த்ரிஷா மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்.

நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. மக்களுக்கு நான் யார் என்பது தெரியும்;

பாஜகவை சேர்ந்த எஸ்.வி. சேகர் பெண்களைப் பற்றி மிகவும் அவதூறாக பேசினார். அது தொடர்பாக எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை;

நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட போது எந்த மகளிர் சங்கமும் போராடவில்லை;

நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையை 4 மணி நேரத்தில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; என்னிடம் முறையான விளக்கம் கேட்டு முதலில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

எல்லோரையும் உசுப்பேற்றி விட்டு எனக்கு எதிராக பேச வைக்கிறார்கள். லோகேஷ் கனகராஜுக்கு இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது . இப்பவும் சொல்கிறேன் நடிகை த்ரிஷா குறித்து தவறாக நான் எதுவும் பேசவில்லை என நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரபல இளம் இசையமைப்பாளர் சென்னையில் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

More in Cinema News

To Top