Connect with us

பார்க் செய்யப்பட்டிருந்த காரில் பரிதாபமாக இறந்து கிடைத்த பிரபல நடிகர்..!! பதறவைக்கும் அதிர்ச்சி தகவல்

Cinema News

பார்க் செய்யப்பட்டிருந்த காரில் பரிதாபமாக இறந்து கிடைத்த பிரபல நடிகர்..!! பதறவைக்கும் அதிர்ச்சி தகவல்

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வினோத் தாமஸ் பார்க் செய்யப்பட்டிருந்த காரில் பரிதாபமாக இறந்து கிடைத்த சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

மலையாள சினிமாவில் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான அய்யப்பனும் கோஷியும், ஜூன் உள்ளிட்ட படங்களில் வினோத் தாமஸ் நடித்திருந்தார் . தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கேரளாவின் கோட்டயம் Pampady பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றின் பார்க்கிங்கில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த காரின் கதவை உடைத்து பார்த்தபோது அதில் நடிகர் வினோத் தாமஸ் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து வினோத் தாமஸ் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரின் ஏசியில் இருந்து விஷ வாயுவை வினோத் தாமஸ் சுவாசித்தால் தான் அவர் மரணமடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவல் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிறப்பாக நடைபெற்று முடிந்த தளபதி 69 படத்தின் பூஜை - வைரல் போட்டோஸ்..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top