Connect with us

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி – டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு..!!

Featured

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி – டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு..!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அங்கு டி20 தொடரில் விளையாடி வருகிறது . இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி அபார வெற்றியுடன் தொடரை தொடங்கியது.

இதையடுத்து செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இரு அணிகளும் களம் காண உள்ளனர் . இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பேட்டிங் செய்ய உள்ளனர்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெறும் இருக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சமந்தா மற்றும் நாக சைதன்யா: காதல், பிரிவு மற்றும் மனவலிமையின் பயணம்..

More in Featured

To Top