Connect with us

டி20 உலக கோப்பை : சிக்ஸ் மழை மொழிந்த ரோஹித் ஷர்மா – ஆஸ்திரேலியா அணிக்கு 206 ரன்கள் இலக்கு..!!

Featured

டி20 உலக கோப்பை : சிக்ஸ் மழை மொழிந்த ரோஹித் ஷர்மா – ஆஸ்திரேலியா அணிக்கு 206 ரன்கள் இலக்கு..!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு 206 ரன்களை இலக்காக வைத்துள்ளது.

Daren Sammy கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் அனல்பறக்கும் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம் போல் கேப்டன் ரோஹித் மற்றும் கோலி களமிறங்கினர் . இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்ததாக பண்டுடன் கைகோர்த்து விளையாடிய ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸ் மழை பொழிந்தார் . தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் அரைசதம் கடந்து அசத்த மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய பண்ட் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் அதிரடி காட்ட அவரும் 31 ரன்களில் வெளியேற மறுபுறம் அதிரடியில் மிரட்டி வந்த ரோஹித்தும் 92 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் வந்த துபே மற்றும் ஹ்ரித்திக் பாண்டியா ரன் மழை பொழிய அணியின் ஸ்கோர் 200 ஐ கடந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 205 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top