Connect with us

தில்லானா மோகனாம்பாள் திரைப்பட புகழ் நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி அவர்கள் காலமானார்..!

Cinema News

தில்லானா மோகனாம்பாள் திரைப்பட புகழ் நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி அவர்கள் காலமானார்..!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் 1968-ல் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் தில்லானா மோகனாம்பாள்….

இதில் சிவாஜிகணேசனுக்கு நாகஸ்வரம் வாசிக்கும் நுட்பங்கள் குறித்து விளக்கியவர்கள் நாகஸ்வர கலைஞர்களான சேதுராமன்-பொன்னுசாமி என்கின்ற சகோதரர்கள் ஆவார்..படத்துக்காக நாகஸ்வரம் வாசித்தவர்களும் அவர்கள்தான்…அப்படி ஒரு சிறப்பு பெற்றவர்கள் அவர்கள்…

காரைக்குடியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இவர்கள் நாகஸ்வரம் வாசித்ததைக் கேட்டு ரசித்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன்,தில்லானா மோகனாம்பாள் படத்தில் வாய்ப்பை வழங்கினார் அதில் சிறந்த வேலையை செய்து அனைவராலும் பாராட்டுகளை பெற்றார்…

அந்தப் படத்துக்குப் பிறகு கோவில் புறா என்ற படத்தில் இசைக் கலைஞராக அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னுசாமி, 9 வயதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார்…சேதுராமன் 2000-ம் ஆண்டில் காலமானார்..இந்நிலையில் பொன்னுச்சாமி நேற்று முன்தினம் இரவு விளாங்குடியில் உள்ள தனது மகன் வீட்டில் காலமானார்…அவருக்கு வயது 91 ஆகியதாம்…

இவருடைய 87 வயது வரை நாதஸ்வரம் வசித்து வந்து இருக்கின்றார்….இவரின் மறைவு தகவல் சினிமா ரசிகர்களை மற்றும் திரையுலகினரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தலையின் பிறந்தநாள் கொண்டாட்டம் - விலையுயர்ந்த பைக்கை பிறந்தநாள் பரிசாக கொடுத்த ஷாலினிஅஜித்..!!

More in Cinema News

To Top