Connect with us

“ஜெயம்ரவி நித்யாமேனனின் அடுத்த படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில்!வைரலாகும் புகைப்படம்”

Cinema News

“ஜெயம்ரவி நித்யாமேனனின் அடுத்த படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில்!வைரலாகும் புகைப்படம்”

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த இறைவன் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தாலும் அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகின்றார்…

அவர் நடிப்பில் தற்போது Brother,ஜீனி,சைரன்,தக் லைஃப்,தனி ஒருவன் 2,எம் குமரன்-2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன…இந்நிலையில் இந்த லிஸ்டில் புதிதாக ஒரு படம் இணைந்து இருக்கின்றது..அதன் போஸ்டர் கூட வைரல் ஆகி வருகின்றது…

அதன்படி உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் இளம்புயல் ஜெயம் ரவி…இதில் நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்…இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது,ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இப்படத்திற்கு காதலிக்க நேரமில்லை என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது…இந்த படத்தின் போஸ்டர் பார்ப்பதற்கே ஒரு Feel Good போல இருக்கும் என தெரியும் வகையில் இது இருக்கின்றது…

ஏற்கனவே ஜெயம் ரவி அடுத்த அடுத்து நடிக்கும் படங்கள் பேசப்படும் போல் இருக்கின்றது…இப்போது இதுவும் சேர்ந்து இருக்கின்றது…சைரன் திரைப்படம் டிசம்பர் 22 வர வாய்ப்பு இருக்கின்றது…அதனை தவிர ஜீனி படத்தில் மூன்று நடிகைகளுடன் நடித்து வருகின்றார்…இதுமட்டுமின்றி மிகவும் முக்கியமான படமான கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் நடிக்கிறார் ஜெயம்ரவி..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இதுவரை யாரும் செய்யாத உலகசாதனை - கொல்கத்தா கொடுத்த இமாலய இலக்கை கடந்து வரலாறு படைத்தது பஞ்சாப் அணி..!!

More in Cinema News

To Top