Connect with us

பிரபல இளம் இசையமைப்பாளர் சென்னையில் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

Cinema News

பிரபல இளம் இசையமைப்பாளர் சென்னையில் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

தமிழ் திரையுலகில் பிரபல இளம் இசையமைப்பாளராக வலம் வந்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமாகி உள்ளார்.

ஈழத்தை மீட்டெடுக்க போராடிய விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை குறித்து உருவான ‘மேதகு’ என்னும் பயோபிக் திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது.

கிட்டு இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் பிரவீன்குமார் .

இளம் வயதிலேயே இசையமைப்பாளராகி உருவெடுத்த இவர் போட்ட மெட்டுக்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க இதையடுத்து மேதகு 2, ராக்கதன், கக்கன் உள்ளிட்ட படங்களுக்கும் பிரவீன்குமார் இசை அமைத்திருந்தார்.

இப்பட பல வெற்றி படங்களுக்கு நல்ல இசையமைத்து கொடுத்த இவர் திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து வளர்ந்து வரும் பிரபல இசையமைப்பாளராக பிரவீன்குமார் வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்தார்.

எல்லாம் நல்லபடி சென்றுகொண்டிருக்க திடீரென பிரவீன் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட அவர் இதற்காக தீவிர சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் அண்மையில் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பிரவீன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து பிரவீன் குமாரின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பைக்கில் சென்றபோது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி - காதலன் உயிரிழப்பு..!!

More in Cinema News

To Top