Connect with us

நடிகர் பிரபு வீட்டு திருமணம்…மாப்பிள்ளையும் ரெடி…எப்போ திருமணம் தெரியுமா!

Cinema News

நடிகர் பிரபு வீட்டு திருமணம்…மாப்பிள்ளையும் ரெடி…எப்போ திருமணம் தெரியுமா!

கோலிவுட்டில் தற்போது அதிகமாக நடிகர் பிரபுவின் மகள் திருமணம் பற்றிய செய்தி தான்…பலரும் இது வதந்தி என்று சொன்னாலும் உண்மை கூட இருக்கலாம் என பலரும் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை தான் அவர்,வருகிற டிசம்பர் 15-ந் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது…இந்த தகவலை பிரபுவின் குடும்பத்தார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதால் இது உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது…பலரும் இது உண்மை என சொல்லும் வகையில் ட்வீட் போட்டும் வருகின்றது…

மேலும் ஐஸ்வர்யா பிரபு – ஆதிக் இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது…இது ஒருபுறம் இருக்க பிரபு மகளின் முதல் திருமணம் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கி உள்ளன….நடிகர் பிரபுவுக்கு ஐஸ்வர்யா என்கிற மகளும், விக்ரம் பிரபு என்கிற மகனும் உள்ளனர். இதில் விக்ரம் பிரபு சினிமாவில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2009-ம் ஆண்டே திருமணம் ஆனது…அவர் குணால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். குணால் வேறுயாருமில்லை நடிகர் பிரபுவின் தங்கை தேன்மொழியின் மகன் தான்…இப்படி சொந்தத்திற்குள் கல்யாணம் செய்து கொண்டனர்…

இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது சிவாஜி வீட்டு திருமணம் என்பதால் இதில் ஜெயலலிதா தொடங்கி அஜித் வரை எக்கச்சக்கமான பிரபலங்கள் படையெடுத்து வந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்…அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது இந்த திருமணம்…

ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக ஐஸ்வர்யா பிரபுவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. விவாகரத்துக்கு பின் தனக்கு மிகவும் பிடித்த பேக்கிங் தொழிலில் இறங்கினார் ஐஸ்வர்யா. தானே சொந்தமாக கேக் நிறுவனம் துவங்கி தயாரித்து விற்பனை செய்து வருகிறார்…இந்நிலையில் அவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்து இருக்கின்றது…

அதன்படி காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் தான் தற்போது திருமண வேலைகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகிறதாம்…இந்த திருமணம் வருகிற டிசம்பர் 15-ந் தேதி கோலாகலாமாக நடக்க இருக்கின்றது…விரைவில் தகவல் வரும் என தெரிகின்றது…பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்க இருக்கின்றது என்று…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தலையின் பிறந்தநாள் கொண்டாட்டம் - விலையுயர்ந்த பைக்கை பிறந்தநாள் பரிசாக கொடுத்த ஷாலினிஅஜித்..!!

More in Cinema News

To Top