Connect with us

தனது உலக சாதனையை முறியடித்த விராட் கோலியை, நெகிழ்ச்சியுடன் பாராட்டிய சச்சின்..!! மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சி தருணம்..

CWC23

தனது உலக சாதனையை முறியடித்த விராட் கோலியை, நெகிழ்ச்சியுடன் பாராட்டிய சச்சின்..!! மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சி தருணம்..

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சினின் இரு பிரம்மாண்ட சாதனைகளை முறியடித்தார் .கோலியின் இந்த அசாத்திய சாதனைக்கு தற்போது நெகிழ்ச்சியுடன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார் சச்சின்.

மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய – நியூசிலாந்து அணிகள் அனல் பறக்க விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த விராட் கோலி கிரிக்கெட் கடவுள் என்று அன்போடு அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் இரு பெரிய சாதனைகளை முறியடித்தார்.

ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் விளாசி, கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் படைத்த பிரமாண்ட சாதனையை அவர் கண் முன்னே முறியடித்து தற்போது முதல் இடத்தில் உள்ளார் இந்திய வீரர் விராட் கோலி.

சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் (463 போட்டிகள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்த நிலையில், அதனை 291 போட்டிகளில் முறியடித்துள்ளார் கோலி

விராட் கோலி – 50
சச்சின் – 49
ரோஹித் ஷர்மா – 31
ரிக்கி பாண்டிங் – 30

இதையடுத்து ஒரு உலக கோப்பை சீசனில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.

விராட் கோலி (2023) – 674* (10 போட்டிகள்)
சச்சின் டெண்டுல்கர் (2003) – 673 (11 போட்டிகள்)

இந்நிலையில் விராட் கோலி படைத்த இந்த பிரம்மாண்ட சாதனைக்கு சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

“டிரெஸ்ஸிங் ரூமில் உங்களை முதன்முதலில் நான் சந்தித்தபோது, சக வீரர்கள் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும், திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட, நான் மகிழ்ச்சியடைய வேறேதும் இல்லை. அதுவும், உலககோப்பை அரையிறுதிப் போட்டி என்ற மிகப் பெரிய அரங்கிலும், எனது சொந்த மைதானத்திலும் இதனை செய்திருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

More in CWC23

To Top