Connect with us

SA v IND 1st Test – Day 2: தனியாளாக சம்பவம் செய்த KL ராகுல்! இந்தியா 245 ரன்களுக்கு All out!

Sports

SA v IND 1st Test – Day 2: தனியாளாக சம்பவம் செய்த KL ராகுல்! இந்தியா 245 ரன்களுக்கு All out!

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிய நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி செவ்வாய்க்கிழமை செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸை வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணையர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். கேப்டன் ரோகித் 4 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஜெய்ஸ்வால் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கில் 2 ரன்களிலும், ஸ்ரேயஸ் ஐயர் 31 ரன்களிலும் வெளியேறினர்.

100 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தது இந்தியா. 64 பந்துகளை எதிர்கொண்ட கோலி, 38 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து அஸ்வின், தாக்கூர், பும்ரா ஆகியோர் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் பேட் செய்த கே.எல்.ராகுல் பொறுப்பாக ஆடினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 105 பந்துகளை எதிர்கொண்ட அவர் 70 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

முதல் நாளில் 59 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் மேற்கொண்டு தொடர முடியாமல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல்.ராகுல் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர, மறுமுனையில் இருந்த சிராஜ் சில ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தார். இதன்பின் கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.

101 ரன்கள் எடுத்திருந்த கே.எல்.ராகுல் கடைசி விக்கெட்டாக விழ, 67.4 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட், நந்த்ரே பர்கர் 3 விக்கெட் கைப்பற்றினர். இந்த நிலையில் 246 ரன்கள் முன்னிலை வகிக்கவேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்கா அணியின் களமிறங்கியது. ஆனால் முதல் விக்கெட்டை இழந்து 14 ஓவர்களில் 42 ரன்கள் என்ற நிலையில் விளையாடிவருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இதுவரை யாரும் செய்யாத உலகசாதனை - கொல்கத்தா கொடுத்த இமாலய இலக்கை கடந்து வரலாறு படைத்தது பஞ்சாப் அணி..!!

More in Sports

To Top