Connect with us

ரன் குவிப்பில் மீண்டும் சாதனை படைக்குமா SRH..? ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று RCB – SRH அணிகள் மோதல்..!!!

Featured

ரன் குவிப்பில் மீண்டும் சாதனை படைக்குமா SRH..? ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று RCB – SRH அணிகள் மோதல்..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் RCB – SRH அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள பேட் கம்மிங்ஸ் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 2 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 3 ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள பாப் டியூபிலிசஸ் தலைமையிலான பெங்களூரு அணி 1 போட்டியில் வெற்றி பெற்று 7 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதிகரிக்கும் கோடை வெப்பம் - சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை..!!!

More in Featured

To Top