Connect with us

லக்னோவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்துமா ராஜஸ்தான்..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..?

Featured

லக்னோவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்துமா ராஜஸ்தான்..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..?

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முத்தலிப் பந்துவீச முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் லக்னோவில் உள்ள எக்கனா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் RR – LSG அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 6 ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டியில் வெற்றி பெற்று 1 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் லக்னோவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top