Connect with us

“முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதற்கு இதுதான் காரணம்! இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டி!”

Sports

“முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதற்கு இதுதான் காரணம்! இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டி!”

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணியின் பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சை அடுத்து, 185 ரன்கள் குவித்து டீல் எல்கரும் மிரட்டினார். தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், 163 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்தியா 2வது இன்னிங்ஸை தொடங்கியது. யஷஸ்வி 5 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா ரன்கள் எதுவும் இன்றி க்ளீன் போல்டும் ஆனார்.

விராட் கோலி மட்டும் அரை சதம் விளாசி கவனம் ஈர்த்தார். அவரும் 76 ரன்களில் நடையைக் கட்டினார். கில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய கே.எல்.ராகுல், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்களில் நடையைக் கட்டினார். பர்கர் 4 விக்கெட்டுகளையும் மார்கோ ஜான்சர் 3 விக்கெட்டுகளையும் ரபாடா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஜஸ்ப்ரித் பும்ரா ரன் அவுட்டனார். இவ்வாறாக இன்னிங்ஸ் வெற்றி அடைந்தது தென்னாப்பிரிக்கா.

அவர் கூறுகையில், “முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் அருமையாக பேட்டிங் செய்தார், ஆனால் நாங்கள் பந்து வீச்சில் மோசமாக செயல்பட்டோம். இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் மோசமாக இருந்தது, விராட் மட்டுமே அற்புதமாக பேட்டிங் செய்தார், ஆனால் நீங்கள் டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்றால், பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதைச் செய்ய நாங்கள் தவறிவிட்டோம்.

இந்த ஆடுகளத்தின் நிலைமைகளிலிருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஒவ்வொரு நபருக்கும் அவரவர் திட்டம் உள்ளது. எங்கள் வீரர்கள் வெவ்வேறு நேரங்களில் சவால் கொடுக்கின்றனர். நாங்கள் இந்த டெஸ்டில் சரியாக ஒத்துப் போகவில்லை. நாங்கள் இரண்டு முறையும் நன்றாக பேட் செய்யவில்லை, அதனால்தான் நாங்கள் தோல்வியுடன் நிற்கிறோம்” என்றார் ரோகித் சர்மா.

அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றோம், இங்கிலாந்தில் ஒரு தொடரை சமன் செய்தோம், அங்கு எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், அதனால் வெளிநாடுகளில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியாமல் இல்லை. சில நேரங்களில் இது போன்று வீரர்களின் செயல்திறன் மோசமானதாகிவிடுகிறது, சில நேரங்களில் எதிரணி சிறப்பாக விளையாடி கேமை வெல்கிறார்கள்” என்றார் ரோகித்.

See also  இறுதி நேரத்தில் செய்த சிறு தவறு - டெல்லியிடம் பரிதாபமாக வீழ்ந்தது குஜராத்..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Sports

To Top