Connect with us

பொறுப்புடன் ஆடிய பெங்களூரு – ஹைதராபாத் அணிக்கு 207 ரன்கள் இலக்கு..!!!

Featured

பொறுப்புடன் ஆடிய பெங்களூரு – ஹைதராபாத் அணிக்கு 207 ரன்கள் இலக்கு..!!!

பரபரப்பாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் RCB – SRH அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டியூபிலிசஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார் .

அதன்படி அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஃபாஃப் டூப்ளசியை 25 ரன்களில் வெளியேற அடுத்து வந்த வில் ஜாக்ஸும் 6 ரன்களில் போல்டானார்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி அரை சதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார் . இதேபோல் சிறப்பாக விளையாடி வந்த ரஜத் படிதாரும் அரைசதம் கடந்த நிலையில் வெளியேறினார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 206 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி..!!!

More in Featured

To Top