Connect with us

தாய் மண்ணில் அதிரடி காட்டிய டெல்லி அணி – மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு..!!

Featured

தாய் மண்ணில் அதிரடி காட்டிய டெல்லி அணி – மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு..!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 258 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் டெல்லியில் உள்ள உலக புகழ் பெற்ற அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் போட்டியில் DC – MI அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் பிரஸ்ஸர் மற்றும் அபிஷேக் போரில் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்க மும்பை பவுலர்ஸ் ஆரம்பத்திலேயே தடுமாற தொடங்கினர்.

எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருக்க அபிஷேக் போரில் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து வந்த ஷாய் ஹோப் -பிரஸ்ஸர் உடன் கைகோர்த்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய பிரஸ்ஸர் அரைசதம் கடந்து அசத்த இந்த பக்கம் ஷாய் ஹோப் 41 ரன்களில் ஆட்டமிழந்தார் அடுத்த கேப்டன் ரிஷப் 29 ரன்களில் வெளியேற ட்ரிஸ்டன் மும்பை பந்துகளில் நாலாபுறமும் பறக்கவிட்டார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 257 ரன்கள் குவித்தது. இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது மும்பை அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top