Connect with us

“நேற்று அயோத்தியில் நாம் பார்த்தவை..! ராமர் கோயில் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்த Viral Video!”

General News

“நேற்று அயோத்தியில் நாம் பார்த்தவை..! ராமர் கோயில் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்த Viral Video!”

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2019 நவம்பரில் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, 2020 ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, கோயில் கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொண்டது.

அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22-ம் தேதி திறக்கப்படும் என்று தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது. இதையொட்டி, கோயிலில் கடந்த 16-ம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கப்பட்டன. 7 நாட்களில் 5.50 லட்சம் மந்திரங்கள் ஓதப்பட்டன. கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய பால ராமர் சிலை கடந்த 19-ம் தேதி கோயில் கருவறையில் நிறுவப்பட்டது.

இதற்கிடையே, பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக, 11 நாள் விரதத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி தொடங்கினார். தமிழகத்தில் ராமேசுவரம், தனுஷ்கோடி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராமாயணம் தொடர்புடைய பல்வேறு புனித தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. பிரதமர் மோடி காலை 10.30 மணி அளவில் அயோத்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார்.

அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோயில் வளாகத்துக்கு வந்தார். பகல் 12.10 மணி அளவில் பால ராமருக்கான வஸ்திரம், வெள்ளி குடை ஆகியவற்றை தாம்பாளத்தில் ஏந்தியபடி கோயிலுக்குள் நுழைந்தார். கோயில் கருவறைக்குள் சென்று சங்கல்ப பூஜை செய்தார். உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் உள்ளிட்டோரும் பூஜையில் பங்கேற்றனர்.

வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, பிரதமர் மோடி அனைத்து பூஜை, வழிபாடுகளையும் செய்தார். மதியம் 12.29 மணி முதல் 12.45 மணிக்குள் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து, பால ராமரின் பாதத்தை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். இதன்பிறகு சுவாமி கோவிந்த் தேவ் வழங்கிய புனித நீரை பருகிய பிரதமர் மோடி, 11 நாள் விரதத்தை நிறைவு செய்தார்.

See also  உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in General News

To Top