Connect with us

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்..!!

Featured

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்..!!

நாடாளுமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட ராஜீவ்குமார் இன்று மாலை வெளியிட்டார்.

அதன்படி 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேரும் உள்ளனர்

முதல் தலைமுறை வாக்காளர்கள் 1.8 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 19.74 கோடி பேர் 20 – 29 வயதுடையவர்களாக உள்ளனர். ஏப்ரல் 1ம் தேதி 18 வயதை 13.4 லட்சம் இளைஞர்கள் அடைய உள்ளதால், அவர்களையும் வாக்காளர்களாக இணைத்துள்ளோம்

85 வயதை கடந்த முதியவர்கள் & மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 40% உடல் ஊனமுற்றவர்கள், வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதர மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டதை அடுத்த தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்கள் படங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொறுப்புடன் ஆடிய பெங்களூரு - ஹைதராபாத் அணிக்கு 207 ரன்கள் இலக்கு..!!!

More in Featured

To Top