Connect with us

மக்களே கையில் மை வைக்க தயாரா..? 7 கட்டங்களாக நடைபெறுகிறது மக்களவை தேர்தல்..!!

Featured

மக்களே கையில் மை வைக்க தயாரா..? 7 கட்டங்களாக நடைபெறுகிறது மக்களவை தேர்தல்..!!

நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மக்களவை தேர்தல் அறிவிப்புகளை புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டுள்ளார் .

மக்களவை தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள ராஜீவ்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறிருப்பதாவது :

நாடு முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேரும் உள்ளனர்

முதல் தலைமுறை வாக்காளர்கள் 1.8 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 19.74 கோடி பேர் 20 – 29 வயதுடையவர்களாக உள்ளனர். ஏப்ரல் 1ம் தேதி 18 வயதை 13.4 லட்சம் இளைஞர்கள் அடைய உள்ளதால், அவர்களையும் வாக்காளர்களாக இணைத்துள்ளோம்

85 வயதை கடந்த முதியவர்கள் & மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 40% உடல் ஊனமுற்றவர்கள், வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதர மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்

மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாக்குமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத்தில் தமிழகம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது

தமிழகத்தில் ஏப்ரல் 19ல் மக்களவை தேர்தல் :

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: March 20
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: March 27
வேட்புமனு பரிசீலனை: March 28
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள்: March 30
வாக்குப்பதிவு: April 19
வாக்கு எண்ணிக்கை: June 4

ஆந்திராவில் மே 13ம் தேதியும், ஓடிசாவில் மே 13, மே 20 & மே 25ம் தேதி என 3 கட்டமாகவும், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ஏப்ரல் 19ம் தேதியும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் விளவங்கோடு தொகுதிக்கு ஏப்ரல் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  12 ஆண்டுகளுக்கு பின் ஜெய்ப்பூரில் ராஜஸ்தானை வெல்லுமா மும்பை - டாஸ் வென்ற MI பேட்டிங் செய்ய முடிவு..!!!

More in Featured

To Top