Connect with us

தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – முதல் முறையாக ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

Featured

தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – முதல் முறையாக ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதல் முறையாக உய்ரநீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சாத்தான் குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தனர் . இதையடுத்து இந்த வழக்கில் சில போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி சுமார் 3 ஆண்டுகளாக சிறையில் உள்ள காவலர் வெயில் முத்துவுக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கயத்தாறு பகுதியைச் சேர்ந்த காவலர் வெயில் முத்து, தனது மகளுக்கு 7ம் தேதி பூப்புனித நீராட்டு விழா இருப்பதால் இடைக்கால ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 9ம் தேதி மாலை 6 மணி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தண்டபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிபிஐ விசாரித்து வரும் இவ்வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள், காவலர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சுமார் 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் வரை சென்றும் யாருக்கும் ஜாமின் கிடைக்காமல் இருந்த நிலையில் இன்று முதல்முறையாக ஒரு காவலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இறுதி நேரத்தில் செய்த சிறு தவறு - டெல்லியிடம் பரிதாபமாக வீழ்ந்தது குஜராத்..!!

More in Featured

To Top