Connect with us

“மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு!”

Cinema News

“மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு!”

இன்று நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் உற்சாகமாக நடை பெற்று வருகிறது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவை செய்ததற்காக விஜயகாந்திற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் சிக்சை எடுத்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலை 6.10 மணிக்கு காலமானார்.

அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலும், பின்னர் தீவுத்திடலிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அரசியல் தலைவர்கள், திரை உலக பிரமுகர்கள், அவரது கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட பலரும் அவரது உதவும் குணத்தையும், அவர் தன்னை பார்க்க வருபவர்களுக்கு உணவு வழங்குவதில் காட்டும் அக்கறையும் சிலாகித்தனர். டிசம்பர் 29ஆம் தேதி மாலையில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினார். மேலும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பலரும் சென்று தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மணிமண்டபமும், சிலையும் அமைக்க வேண்டும் என தேமுதிக சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் கோயம்பேடு தேமுதிக அலுவலகம் உள்ள சாலைக்கு விஜயகாந்த் சதுக்கம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, தேக்கம்பட்டி கிராமம், தாசம்பாளையம் பகுதியை சேர்ந்த திரு பத்ரப்பன் என்பவருக்கு கிராமிய கலைகளை வளர்த்தற்காக தனது தள்ளாத வயதிலும் திறம்பட செயல்பட்டுக் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு இன்று பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.திரு.பத்தரப்பன் அவர்களை அவரது இல்லத்தில் இன்று இரவு மாண்புமிகு மத்திய அமைச்சர் எல் முருகன் அவர்கள் சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். பத்மஸ்ரீ விருது இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பாரத ரத்னா மிக உயரிய சிவிலியன் விருதாகும்.

அதே சமயம் பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் தனி மனிதர்களின் சிறப்பான பணிகளுக்காக வழங்கப்படுகிறது. அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து மரியாதையின் படி நிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது பத்ம விருதுகள். பத்ம விருதுகள் மூன்று வகைப்படும் அவை 1. பத்மஸ்ரீ 2. பத்மபூஷன் 3. பத்ம விபூஷன் ஆகியவையாகும். பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி விருதுகளை வழங்கி கௌரவிப்பார். இந்நிலையில் கலைத்துறையில் சிறந்த தேவையற்றதற்காக நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

See also  இதுதான் செல்லம்மா திட்றதா : ‘கண்டனம்’ என்ற வார்த்தை இன்றி பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த EPS..!!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top