Connect with us

கட்சிக்கு புதிய தலைவர் நியமனம்… 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக காங்கிரசில் ஆச்சரியம்!

selvaperunthagai-congress

Politics

கட்சிக்கு புதிய தலைவர் நியமனம்… 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக காங்கிரசில் ஆச்சரியம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019 பிப்ரவரில் அப்போதைய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்தது. அவரது தலைமையில் திமுகவுடன் இருந்துகொண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவு இடங்களை கைப்பற்றியது.

இந்நிலையில், அவர் விரைவில் தலைமை பொறுப்பில் இருந்து மாற்றப்படுவார் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே அடிபட்டு வந்தது. மேலும், தலைவர் பதவிக்கு கரூர் எம்பி ஜோதிமணி, எம்பி கார்த்தி சிதம்பரம், எம்பி மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டு வந்தன.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் கு.செல்வப்பெருந்தகை கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தற்போது ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவாகவும், கட்சியில் சட்டசபை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இளையபெருமாள், மரகதம் சந்திரசேகரைத் தொடர்ந்து 40 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர் வகித்து வந்த கட்சியின் சட்டசபை தலைவர் பதவிக்கு ராஜேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Politics

To Top