Connect with us

மக்களவை தேர்தல் : தமிழ்நாட்டில் மக்களின் வசதிக்காக 68,321 வாக்குச்சாவடிகள் அமைப்பு – சத்யபிரதா சாஹூ

Featured

மக்களவை தேர்தல் : தமிழ்நாட்டில் மக்களின் வசதிக்காக 68,321 வாக்குச்சாவடிகள் அமைப்பு – சத்யபிரதா சாஹூ

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் மக்களின் வசதிக்காக 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாஹூ கூறியதாவது :

தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; தமிழ்நாடு முழுவதும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் .

தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்; தேர்தல் பணியில் 3.3 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாலை 6 மணிக்குள் வருகை தரும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிக்க அனுமதியளிக்கப்படும்

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் சென்றாலும், வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது

வாக்கு எண்ணும் மையங்களில் 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்;

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம்இதுவரை 4 ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

More in Featured

To Top