Connect with us

கடந்த தேர்தலை விட இந்த முறை வாக்குபதிவு அதிகம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி..!!

Featured

கடந்த தேர்தலை விட இந்த முறை வாக்குபதிவு அதிகம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி..!!

கடந்த தேர்தலை விட இந்த முறை வாக்குபதிவு அதிகம் வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் பொது மக்கள் திரை பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது பொன்னான வாக்குகளை பதிவு செய்தனர் .

இந்நிலையில் கடந்த தேர்தலை விட இந்த முறை வாக்குபதிவு அதிகம் வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு கூறியதாவது :

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது : தமிழ்நாட்டில் மொத்தம் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.69% வாக்குகள் பதிவு. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகள் பதிவாகி உள்ளன .

கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலை விட இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். நாளை 12 மணிக்கு இறுதி விபரங்கள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top