Connect with us

7ம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சி தலைமை

Featured

7ம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சி தலைமை

கமல்ஹாசன் அவர்களால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி 7ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ணியில் அதன் தொடக்க விழா வரும் 21ம் தேதி நடைபெற உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது .

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை, அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம்’ என்று முழங்கி நம்மவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நாள் பிப்ரவரி 21.

அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி நம்மவர் காலை 10 மணியளவில், நமது தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.

அந்த சீர்மிகு நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள்; நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தாய்மொழி தினத்தில் (பிப்ரவரி 21) பிறந்த மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும். வரலாறு அதைச் சொல்லும. வாருங்கள்! ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம், நாடாளுமன்றத்தில் நம்மவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top