Connect with us

தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லை, கல்லறைக்குள் சென்று விட்டதா??? – அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்

Featured

தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லை, கல்லறைக்குள் சென்று விட்டதா??? – அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்

இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மத்தியில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து, இந்தியா கூட்டணி கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது :

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி கூட மிஞ்சாது, உங்கள் சொத்துக்களையும், பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து விடுவார்கள்.

இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமரின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் தற்போது தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது கண்டனத்தை ட்வீட் மூலம் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் கூறிருப்பதாவது :

தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லை, கல்லறைக்குள் சென்று விட்டதா???

தேர்தல் பிரச்சாரங்களில்:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து “இது முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல் உள்ளது” எனக் கூறினார் மோடி.

காஷ்மீரில் தாவர உணவு சாப்பிடுகின்ற மக்கள் மத்தியில் பேசும்போது மாமிச உணவு சாப்பிடுபவர்களை பற்றி கொச்சையாக விமர்சித்தார் மோடி.

நேற்று ராஜஸ்தானில் “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி கூட மிஞ்சாது, உங்கள் சொத்துக்களையும், பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து விடுவார்கள்” என்று கூறியுள்ளார் மோடி.

இதிலிருந்து மோடியின் பேச்சில் தோல்வி பயமும், விரக்தியும் வெளிப்படையாகவே தெரிகிறது. ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் ஓட்டுக்காக மக்களை பிரிக்கும் முயற்சியாக இப்படி மத வெறுப்புடன் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கே இழுக்கு! என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பள்ளி கணக்கு பாடத்தில் சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை நீக்கிடுக - ஜவாஹிருல்லா வேண்டுகோள்..!!

More in Featured

To Top