Connect with us

பொய் பேச்சு பேசிய எடப்பாடி என்னிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும் – தயாநிதி மாறன் ஆவேசம்

Featured

பொய் பேச்சு பேசிய எடப்பாடி என்னிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும் – தயாநிதி மாறன் ஆவேசம்

தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறி அவர் மீது திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் கூறியதாவது :

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு புறமாக, நான் தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என தவறாக பேசியுள்ளார்.

இதை எதிர்த்து நான் அவருக்கு 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. எனவே அவர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளோம்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை தாக்கவேண்டும் என்றே பேசுகிறார் அவரின் பேச்சு அநாகரீகமற்றது என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top