Connect with us

கெத்து காட்டிய கோபாலு – OTT வரலாற்றில் புதிய சாதனை படைத்தது ‘கூச முனுசாமி வீரப்பன்’

Cinema News

கெத்து காட்டிய கோபாலு – OTT வரலாற்றில் புதிய சாதனை படைத்தது ‘கூச முனுசாமி வீரப்பன்’

OTT யில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வரும் கூச முனுசாமி வீரப்பன் ஆவணத் தொடர் தற்போது OTT வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் கர்நாடகா என இரு மாநிலங்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் சந்தன மரம் கடத்தல் வீரப்பன்.

போலீஸ் மற்றும் அரசியலில் இருப்பர்வர்களுக்கு வில்லனாக தெரிந்தாலும் பல குடும்பங்களுக்கு சோறு போட்ட ஹீரோவாக வீரப்பன் வலம் வந்தார் .

சந்தன மரம் கடத்தல் , யானை தந்தம் கடத்தல், ஆள் கடத்தல் என பல வழக்குகள் அவர் மீது உள்ளதாக கூறப்பட்டாலும் அவரது நிழலை கூட தொட முடியாமல் இரு மாநில காவல் துறைகள் திக்குமுக்காடின.

வீரப்பன் மீது தமிழகம் மற்றும் கர்நாடக ,மாநிலங்களிலும் ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்நிலையில் காவல்துறை மற்றும் அரசியல் கட்சிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்த வீரப்பனை கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு அதிரடிப்படை தலைவர் விஜய்குமார் தலைமையிலான போலீசார் சுட்டுக் கொன்றனர்.

வீரப்பனின் இறப்புக்கு பின் அவரது மரணம் குறித்து ஏகப்பட்ட கட்டு கதைகள் வலம் வந்த நிலையில் வீரப்பன் குறித்து பல ஆவணப் படங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள் வெளியாகின . அந்த வகையில் ஷரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆவணத் தொடர் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.

கூச முனுசாமி வீரப்பன் என பெயரிடப்பட்ட இந்த ஆவண தொடரை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார்.

இந்த தொடர் கடந்த டிசம்பர் மாதம் ஜீ தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வீரப்பனின் மற்றொரு முகத்தை உலகிற்கு காட்டியுள்ளது .

வனப்பகுதியில் வீரப்பன் கெத்தாக வலன் வந்த காலத்தில் அவரை பேட்டி எடுத்த நக்கீரன் கோபால் வீரப்பன் பேசும் பல வீடியோக்களை எடுத்து பாதுகாப்பாக இதுநாள் வரை வைத்திருந்தார்.

அந்த வீடியோக்களை இந்த ஆவண திடரில் இணைத்து மக்களுக்கு வீரப்பன் யார் என்பதை உலகிற்கு வெளிச்சம் போடு காட்டியுள்ளார்.

இந்நிலையில், கூச முனுசாமி வீரப்பன் தொடர் ஓடிடி தளத்தில் இதுவரை படைத்திடாத புதிய சாதனையை படைத்திருக்கிறது.

இந்திய அளவில் இந்த சீரிஸ் டிரெண்டிங்கில் உள்ளது. அதே சமயம், உலக அளவில் சுமார் 125 மில்லியனுக்கும் அதிகமாக ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்து உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரன் குவிப்பில் மீண்டும் சாதனை படைக்குமா SRH..? ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று RCB - SRH அணிகள் மோதல்..!!!

More in Cinema News

To Top