Connect with us

சாமானிய மக்களுக்கு இதுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் – சசிகலா

Featured

சாமானிய மக்களுக்கு இதுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் – சசிகலா

தமிழக அரசின் 2024-2025 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை சாமானிய மக்களுக்கு மிக பெரிய ஏமாற்றமாக இருக்கும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தெரிவித்துள்ளார் .

தமிழ் அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சசிகலா கூறிருப்பதாவது :

தமிழக அரசின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையானது சாமானிய மக்களுக்கு பெரிதும் பயனளிக்காத வெற்று அறிவிப்புகள் அடங்கிய ஒரு அலங்கார அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது.

தமிழக மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் எந்தவித உருப்படியான திட்டங்களும் இடம்பெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் பெருவாரியான மக்கள் பயனடையும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டுவந்த அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் நிறுத்திவிட்டு தமிழக மக்களை ஏமாற்றியது தான் மிச்சம்.

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது தமிழக அரசின் கடனானது 4,56,661 கோடி ரூபாயாக இருந்த நிலையில், மூன்றே ஆண்டுகளில் இதுவரை யாரும் செய்யாத ஒரு வரலாற்று சாதனையாக

3,76,700 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று, இன்றைக்கு தமிழகத்தின் கடன் சுமை 8,33,362 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் நிலையில், நாட்டிலேயே அதிக கடன் சுமை கொண்ட மாநிலமாக தமிழகத்தை ஆக்கியது தான் திமுக தலைமையிலான ஆட்சி தான் .

இதன் மூலம் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கும்பத்தினரின் தலையிலும் 3,77,086 ரூபாய் கடன் சுமை இருப்பதைத்தான் திமுக தலைமையிலான அரசின் அறிவுசார் பொருளாதாரமா? என்ற கேள்வி எழுகிறது.

திமுக, ஆட்சியில் அமர்வதற்கு முன் தனது தேர்தல் அறிக்கையில் ‘அதை செய்வோம், இதை செய்வோம்’ என்று சொல்லி, மக்களை நம்ப வைத்து ஆட்சியை பிடித்து மூன்று வருடம் முடிந்து விட்டது.

அரசு ஊழியர்களை நம்பவைத்து அவர்களது எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாமல், அவர்களுக்கு நடைமுறையில் இருந்து வந்த சலுகைகளையும் பறித்துக்கொண்டதுதான் மிச்சம்.

தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டதா? தகுதியுள்ள பெண்களுக்குத்தான் உரிமை தொகை என்று சொல்லி மாநிலத்தில் உள்ள பாதி குடும்ப அட்டைதாரர்களை ஏமாற்றியதுதான் மிச்சம்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை எளிய சாமானிய மக்களின் பசியாற கொண்டு வந்த அம்மா உணவக திட்டம் இன்றைக்கு அழியும் நிலையில் உள்ளது.

திமுகவினர் தமிழக மக்களை மீண்டும் ஏமாற்றி இனி எந்த காலத்திலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாது. 2026-க்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்காது.

See also  விமல் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!!

உண்மை நிலை இவ்வாறு இருக்க, 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம், இது ஒரு வடிகட்டிய பொய் என்பது தமிழக மக்களுக்கு தெளிவாக விளங்கியிருக்கும்.

திமுகவினர் மிச்சம் உள்ள இரண்டு ஆண்டுகளில் யாருக்கும் எந்த வீடும் கட்டித்தரப்போவது இல்லை என்பது இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகள் தமிழகத்தில் அமைதி நிலவுவதாக நிதிநிலை அறிக்கையில் வாய் கூசாமல் பொய்யான கருத்துக்களை தெரிவித்து இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

எனவே, தமிழக அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை யாருக்கும் பயனளிக்காத ஒரு விளம்பர அறிக்கையாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சாமானிய மக்களை நம்பவைத்து ஏமாற்றக்கூடிய வெற்று அறிவிப்புகள் அடங்கிய ஒரு அலங்கார நிதிநிலை அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது.

திமுகவினர் தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதை விட்டு விட்டு, எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது பயனளிக்கின்ற திட்டங்களை அளிக்க முன் வரவேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top