Connect with us

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியாகிறது – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!!

Featured

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியாகிறது – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற மே 10ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

கடந்த சில நாட்களுக்கு முன் 12ம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்த நிலையில் 2023-2024-ஆம் கல்வியாண்டிற்கான 10ம்வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 10.05.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது .

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரியில் அறிந்துக்கொள்ளலாம் :

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in https://results.digilocker.gov.in/ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த கைப்பேசி எண்ணிற்கும், குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

எனவே 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி ரிசல்டிற்காக காத்திருக்கும் மாணவர்களே இப்போதிலிருந்தே 11 ஆம் வகுப்பில் எந்த குரூப் எடுக்கலாம் என தெளிவாக யோசித்துவையுங்கள் அப்போது தான் தேர்வு முடிவுக்கு பின் அதற்கான வேளைகளில் ஈடுபட முடியும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான ‘PT சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Featured

To Top