Connect with us

விராட் கோலி தடாலடி பேட்டிங் – பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 242 ரன்கள் இலக்கு..!!

Featured

விராட் கோலி தடாலடி பேட்டிங் – பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 242 ரன்கள் இலக்கு..!!

விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வரும் நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி பஞ்சாப் அணிக்கு 242 ரன்களை இலக்காகி நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் உலக புகழ் பெற்ற தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 58 ஆவது லீக் போட்டியில் RCB – PBKS அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டியூபிலிசஸ் களமிறங்கினர் . இதில் நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டியூபிலிசஸ் 9 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வில் ஜாக்ஸ்சும் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த ரஜித் படித்தார் விராட் கோலியுடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்திய நிலையில் ரஜித் படித்தார் 55 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த க்ரீன் வந்த நொடி முதல் பட்டயகிளப்ப அணியின் ஸ்கோர் எங்கேயோ சென்றது தொடர்ந்து சிறப்பாக விளையாடிய க்ரீன் 46 ரன்னில் வெளியேற அந்த நேரம் பார்த்து மழையும் வந்துவிட்டது.

இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது . பின்னர் மழை நின்ற பின் ஆட்டம் மீண்டும் தொடங்க சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 92 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 241 ரன்கள் குவித்தது . இதையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் தரம்சாலாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

More in Featured

To Top