Connect with us

ஒவ்வொன்றும் ஒவ்வரு ரகம் : பந்துவீச்சில் கலக்கிய SRH – LSG அணி 165 ரன்கள் குவிப்பு..!!

Featured

ஒவ்வொன்றும் ஒவ்வரு ரகம் : பந்துவீச்சில் கலக்கிய SRH – LSG அணி 165 ரன்கள் குவிப்பு..!!

IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணி சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 57 ஆவது லீக் போட்டியில் SRH – LSG அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார் . இதையடுத்து லக்னோவின் ரன்குவிப்பை தவிர்க்கும் வகையில் ஹைதராபாத் அணி பந்துவீசியது.

இந்த பக்கம் லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ராகுல் மற்றும் டி காக் களமிறங்கினர். ஆரம்பம் முதல் ஹைதராபாத் பந்துகளை எதிர்கொள்ள இந்த ஜோடி தடுமாறியது.

போக போக ரன் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தபோது டி காக் 2 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஸ்டோனிஸ் 3 ரன்னில் வந்த வேகத்தில் சென்றார்.

இதையடுத்து கேப்டன் ராகுலும் 29 ரன்னில் ஆட்டமிழக்க ஹைதராபாத் பந்து வீச்சில் பட்டயகிளப்பியது.
அடுத்ததாக களம் கண்ட இளம் வீரர்கள் நிகோலஸ் பூரான் மற்றும் பதோனி முடிந்த வரை போராடி ஸ்கோர் எடுக்க இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 165 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  OTTயில் வெளியாகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - எப்போது தெரியுமா..?

More in Featured

To Top