Connect with us

வசூலில் தடுமாறுகிறதா லால் சலாம்..இத்தனை நாளில் இவ்ளோ தான் வசூலா..?

Cinema News

வசூலில் தடுமாறுகிறதா லால் சலாம்..இத்தனை நாளில் இவ்ளோ தான் வசூலா..?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த பிப் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லால் சலாம் படத்தின் லேட்டஸ்ட் விவரம் வெளியாகி உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் மாபெரும் பொருட்செலவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் லால் சலாம் . இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் .

இதுமட்டுமின்றி இப்படத்தில் மொய்தீன் பாய் எனும் கவுரவ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க அவருடன் சேர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்வும் நடித்துள்ளார்.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குங்களில் கோலாகலமாக வெளியானது.

இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் வசூலும் மாதமாக தான் இருப்பதாக திரை துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வெளியாகி 10 நாட்களில் உலக அளவில் வெறும் ரூபாய் 30 கோடி தான் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!!!

More in Cinema News

To Top