Connect with us

களத்தில் அதிரடி காட்டப்போவது யார்..? ஹைதராபாத் மண்ணில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

Featured

களத்தில் அதிரடி காட்டப்போவது யார்..? ஹைதராபாத் மண்ணில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 57 ஆவது லீக் போட்டியில் SRH – LSG அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து லக்னோவின் ரன்குவிப்பை தவிர்க்கும் வகையில் ஹைதராபாத் அணி பந்துவீச தயாராகி வருகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ள பேட் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 6 போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 4 ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ள கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணி 6 போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 6 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்..!!

More in Featured

To Top