Connect with us

எனக்கு எதுக்கு அவுட் கொடுத்தீங்க – நடுவருடன் சண்டைக்கு சென்று சஞ்சு சாம்சனுக்கு அபராதம்..!!

Featured

எனக்கு எதுக்கு அவுட் கொடுத்தீங்க – நடுவருடன் சண்டைக்கு சென்று சஞ்சு சாம்சனுக்கு அபராதம்..!!

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி மனஉளைச்சலில் இருந்து வரும் நிலையில் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது அந்த அணிக்கு மேலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் டெல்லியில் உள்ள உலக புகழ் பெற்ற அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடரின் 56 ஆவது லீக் போட்டியில் DC – RR அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து கடின இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி பேட்டிங் செய்தது.

பேட்டிங்கில் கெத்துக்காட்டிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை குவித்தது . இதையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இமாலய இலக்கை கடக்க உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோது இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் தனி ஆளாக போராடி ரன் குவிப்பில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் அரைசதம் கடந்து அசத்தினார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சஞ்சு 86 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அணியை வெற்றி பெற செய்ய ரிஸ்க் எடுத்து விளையாடிய சஞ்சு சிக்ஸர் அடிக்க முயன்றார் அப்போது பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ஷாய் ஹோப் கேட்ச் பிடித்தார்.

இதையடுத்து செக் செய்து பார்த்த டிவி அம்பயர் அவுட் என அறிவித்தார் . இதனால் கோபமடைந்த சஞ்சு சாம்சன் ஷாய் ஹோப் கேட்ச் பிடித்தபோது அவரது கால் பௌண்டரி லைனில் பட்டது என கூறி நடுவர்களுடன் விவாதித்தார்.

இந்நிலையில் அவுட் கொடுத்த பிறகும் நடுவருடன் விவாதித்த கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது . சஞ்சு சாம்சனுக்கு போட்டிக்கான கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி மனஉளைச்சலில் இருந்து வரும் நிலையில் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது அந்த அணிக்கு மேலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது .

See also  11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிகிறோம் - அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top