Connect with us

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை..!!

Featured

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை..!!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

திடீரென பெரு மழை பெய்தாலோ பெரும் வெள்ளம் ஏற்பட்டாலோ அதனை எதிர்கொள்ளவும் மக்கள் காப்பாற்றவும் மீட்பு குழுகள் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் வடகிழக்குப்‌ பருவமழையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினருக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளியின் மூலம் 17,305 காவல் ஆளிநர்களுக்கும், 1095 ஊர் காவல் படை ஆளிநர்களுக்கும் மற்றும் 793 தன்னார்வலர்களுக்கும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவமழைக்காக ADGP Operations அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டறை 24×7 மணிநேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அந்தந்த எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் மழைப்பொழிவின் அளவு, அணைகளின் நீர்மட்டம் போன்றவை தொடர்ந்து கண்காணிப்பு.

24 மணி நேர அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது 112, 1070, 94458 69843, 94458 69848 இந்த எண்களை தொடர்புகொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தாய் மண்ணில் அதிரடி காட்டிய டெல்லி அணி - மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு..!!

More in Featured

To Top