Connect with us

சென்னையில் நாளை மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்பு – அதிர்ச்சி தகவல் கொடுத்த பிரதீப் ஜான்

Featured

சென்னையில் நாளை மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்பு – அதிர்ச்சி தகவல் கொடுத்த பிரதீப் ஜான்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக பிரபல தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் . இங்கு தற்போது வரை 2 செ.மீ. முதல் 3 செ.மீ. வரை மழை பெய்துள்ளது

சராசரியாக 15 செ.மீ. அளவிலும் மிக கனமழையின்போது 25 செ.மீ. அளவிலும் மழை பெய்ய வாய்ப்பு

கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது

விருதுநகர் மாவட்டம் மற்றும் நெல்லை மாஞ்சோலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது

தமிழ்நாட்டின் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள நிலையில் தற்போது பிரதீப் ஜான் இப்படி ஒரு தகவலை வெளியிட்டுள்ளது சென்னை வாசிகள் மத்தியில் மீண்டும் பீதியை கிளப்பி உள்ளது.

மிக்ஜாம் புயலால் ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அங்கு கனமழை என்ற செய்தி வந்துள்ளதால் தமிழக அரசு தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top