Connect with us

“1000 கோடி வசூலை நெருங்கும் பிரபாஸின் கல்கி” இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

“1000 கோடி வசூலை நெருங்கும் பிரபாஸின் கல்கி” இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பிரபாஸ் உள்பட இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் ஒன்று கூடி நடித்த கல்கி 2898 AD படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி கடந்த மாத இறுதியில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கல்கி 2898 AD . அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பட்டானி என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது .

ஒட்டு மொத்த சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் தற்போது வரை பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது .

தமிழ் , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி உள்ள இப்படத்தை தற்போது ரசிகர்கள் ஏகபோகமாக கொண்டாடி வரும் நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் வசூல் விவரத்தை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

அதன்படி, கல்கி திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இன்னும் ஓரிரு நாட்களில் இப்படம் 1000 கோடி வசூலை தாண்டும் என திரைத்துறை வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

ஏற்கனவே பல சூப்பர் ஹிட் படங்களின் மொத்த வசூல் கடந்து சாதனை படித்துள்ள இப்படம் இன்னும் 1000 கோடி வசூலை கடந்து இன்னும் பல சாதனைகளை படைக்குமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜெயம்ரவியின் 'Brother' படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top