Connect with us

“எனக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனையே அங்குதான் ஆரம்பமானது! இயக்குனர் அமீர் சொன்ன விஷயம்!”

Cinema News

“எனக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனையே அங்குதான் ஆரம்பமானது! இயக்குனர் அமீர் சொன்ன விஷயம்!”

நடிகர் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கினார் அமீர். அந்தப் படம்தான் கார்த்திக்கு முதல் படம். தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் பருத்திவீரன் திரைப்படம் எப்போதுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கோலிவுட்டில் கிராமத்து கதைகளுக்கான ட்ரெண்டை மீண்டும் செட் செய்தது அந்தப் படம்தான். ஆனால் அதே படம் ஞானவேல் ராஜாவுக்கும் அமீருக்கும் இடையே பிரச்னையையும் உருவாக்கியது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

சூழல் இப்படி இருக்க ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அமீரிடம் யாரும் போய் பருத்திவீரன் படம் செய்துகொடுங்கள் என்று கேட்கவில்லை. 58 லட்சம் ரூபாய் கடனுக்காகத்தான் அவர் அந்தப் படத்தை எங்களுக்கு செய்துகொடுத்தார் என ஞானவேல் ராஜா கூற; அதற்கு அமீர் பதிலடி தந்தார். மேலும் நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு படம் ஆரம்பித்து பாதியிலேயே ஓடி போனவர் ஞானவேல் ராஜா என்று குறிப்பிட்டிருந்தார்.

அமீரின் அறிக்கையை அடுத்து இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, கரு பழனியப்பன், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோரும் அமீருக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருக்கின்றனர். அதிலும் சசிகுமாரும், சமுத்திரகனியும் பருத்திவீரனை சுற்றி நடந்த பண பஞ்சாயத்து என்ன என்பதையும் தங்களது பேச்சில் ஆணித்தரமாக கூறியிருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அமீருக்கு ஆதரவு பெருகிவருகிறது.

இதற்கிடையே மௌனம் பேசியதே படத்திலிருந்தே சூர்யாவுக்கும் அமீருக்கு முட்டிக்கொண்டது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் என்ன பிரச்னை என்பது குறித்து யாரும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் அமீர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் சூர்யாவுக்கும் என்ன பிரச்னை என்பது குறித்து பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், ‘மௌனம் பேசியதே படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. எனது முதல் படம் என்பதால் பத்திரிகையாளர்களை பார்த்ததும் எனக்கு வியர்த்து போய்விட்டது. வந்திருந்தவர்கள் என்னை பார்த்து எதற்காக இப்படி பதற்றமடைகிறீர்கள் என கேட்டார்கள்.

அதற்கு நான் இல்லை உங்களை பார்த்ததும் எனக்கு வந்துவிட்டது என்றேன். அதனையடுத்து அவர்கள் என்னிடம், நீங்கள் ஹீரோவுக்காக கதை எழுதினீர்களா இல்லை கதையை எழுதிவிட்டு இவர்தான் ஹீரோ ஃபிக்ஸ் செய்தீர்களா என கேட்டார்கள். நான் உடனே எதார்த்தமாக இல்லை ஹீரோவுக்காக நான் கதை எழுதவில்லை. கதையை எழுதிவிட்டேன். அந்தக் கதை என்ன சொன்னதோ அதைத்தான் கேட்டே என்கிற தொனியில் சொன்னேன். நான் அப்படி சொன்னது எனது அருகில் இருந்த சூர்யாவை காயப்படுத்திவிட்டது. அவர் அப்போது கோபித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்” என்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Cinema News

To Top