Connect with us

ஷூட்டிங்கில் காயம் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஓய்வுக்கு சென்றார் சூர்யா..வைரலாகும் வீடியோ!

Cinema News

ஷூட்டிங்கில் காயம் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஓய்வுக்கு சென்றார் சூர்யா..வைரலாகும் வீடியோ!

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார்…இப்படம் வேற லெவலில் உருவாகி வருகின்றது…இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர்,அதனை போல பலரும் இப்படம் பற்றிய அப்டேட் எப்போது வரும் என தெரிந்து கொள்ள ஆர்வமாக காத்து இருக்கின்றனர்…

சிறுத்தை சிவா இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் சில தினங்களுக்கு முன்பு சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது…அதனால் கொஞ்சம் அவர் சோர்வாக தான் இருக்கின்றார் என்ற தகவல் வந்தது என்றும் சொல்லலாம்..

ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் சூர்யாவின் தோளில் காயம் ஏற்ப்பட்டது…அதனால் சூர்யா சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருகிறார்…அது பெரிய காயம் இல்லை என்றாலும் ரெஸ்ட் இல்லையென்றால் வலி வரும் என சொல்லப்படுகின்றது…

இதற்கு முன்பு ஆதவன் படத்தில் நடிக்கும் போது சூர்யாவுக்கு தோளில் காயம் ஏற்பட்டு இருந்தது..ஹெலிகாப்டர் காட்சியில் நடித்தபோது அவர் காயம் அடைந்த நிலையில் தற்போது 14 வருடங்கள் கழித்து சூர்யாவுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டு இருக்கிறது…இது பெரிதாகாமல் பார்த்து கொண்டு வருகின்றனர் படக்குழுவினர்….

இப்படி இருக்கும் நிலையில் சூர்யா ஓய்வெடுப்பதற்காக மும்பைக்கு கிளம்பி இருக்கிறார்…அவர் ஏர்போர்ட் வரும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது…சீக்கிரம் சரி ஆகிடும் அண்ணா என அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூப்பர் ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் - யார் தெரியுமா..?

More in Cinema News

To Top