Connect with us

“நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமான பேச்சு..! மன்சூர் அலிகானுக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் MS பாஸ்கர்!”

Cinema News

“நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமான பேச்சு..! மன்சூர் அலிகானுக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் MS பாஸ்கர்!”

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மன்சூர் அலிகான். அவரது தீவிர ரசிகர் லோகேஷ் என்பதால் இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். மன்சூரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்தார். எனவே அடுத்தடுத்து இவருக்கு லோகேஷ் படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சூழல் இப்படி இருக்க தற்போது அவரே அவரது வாயால் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டார்.

சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த அவர், “த்ரிஷாவுடன் பெட்ரூம் சீன் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் த்ரிஷாவையும் போடலாம் என்று நினைத்தேன். மிஸ் ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார். மன்சூரின் இந்தப் பேச்சுக்கு த்ரிஷா தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். அதுமட்டுமின்றி திரையுலகில் நடிகைகள், நடிகர்கள் பெரும்பாலானோர் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.

நடிகர் சங்கமும் கண்டன அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மேலும் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து டிஜிபிக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழலில் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான எம்.எஸ்.பாஸ்கர் இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், “தி ரோட் படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நான் நடித்திருந்தேன். ஷூட்டிங்கில் அவர் ரொம்பவே மரியாதையுடனும், தன்மையுடனும் பழகக்கூடியவர்.

த்ரிஷா, மடோனா, குஷ்பூ, ரோஜா குறித்து மன்சூர் அலிகான் பேசியிருப்பது ரசிக்கும்படி இல்லை. நகைச்சுவையாக பேசுகிறேன் என்ற பெயரில் மற்றவர்களை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. வக்கிர குணம் கொண்ட சிலர் இதை வைத்து நடிகைகளை எப்படி மோசமாக கமெண்ட் செய்கிறார்கள் என்பதை மன்சூர் அலிகான் பார்க்க வேண்டும். இது அவசியமா என்பதை சற்று சிந்தித்து அவர் பேசியிருக்க வேண்டும். இனி இவ்வாறு பேசாதீர்கள்” என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகர் யோகி பாபு - வெளியானது தாறுமாறு தகவல்..!!

More in Cinema News

To Top