Connect with us

தமிழகம் முழுவதும் நாளை 2000 இடங்களில் மருத்துவ முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Featured

தமிழகம் முழுவதும் நாளை 2000 இடங்களில் மருத்துவ முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் நாளை (02.12.2023) 2000 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாகவும் அதில் 100 முகாம் சென்னை மாநகராட்சியில் நடைபெறும் என தமிநாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 23.10.2023 தொடங்கி தற்போது வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் முகாம் 1000 என்று அறிவிக்கப்பட்டு 2000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

அந்தவகையில் கடந்த 5 வாரங்களில் இதுவரை 10,576 முகாம்கள் நடைபெற்று, அதில் 5,21,853 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். மழைப்பொழிவு அதிகமாக உள்ள காரணத்தினால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி நாளை 02.12.2023 அன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் 2000 இடங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும்.

பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அரண்மனை 4 படத்தில் நடிக்க நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

More in Featured

To Top