Connect with us

சாய் சுதர்சன் , கில் அதிரடி சதம் – சென்னை அணிக்கு 232 ரன்கள் இமாலய இலக்கு..!!

Featured

சாய் சுதர்சன் , கில் அதிரடி சதம் – சென்னை அணிக்கு 232 ரன்கள் இமாலய இலக்கு..!!

விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வரும் நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 232 ரன்களை நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் அகமதாபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 59 ஆவது லீக் போட்டியில் CSK – GT அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக வெற்றிகரமாக டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்து கடின இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் குஜராத் அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக இம்முறை தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் கில் களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி சென்னை பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

தங்களது அதிரடியான பேட்டிங்கால் எதிரணியை திக்குமுக்காட வைத்த இருவரும் சதம் விளாசி அசத்தினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் அணியின் ஸ்கோர் 250 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட போது சாய் சுதர்சன் 103 ரன்னிலும் கில் 104 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த மில்லர் மற்றும் ஷாருக்கான் நிதானமாக ஆட இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 231 ரன்கள் குவித்தது . இதையடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது சென்னை அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இளையராஜா - அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பு - காரணம் என்ன தெரியுமா..?

More in Featured

To Top