Connect with us

சட்டென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் – அரவணைப்புடன் அறிவுரை கூறிய எம்.எஸ்.தோனி..!!

Featured

சட்டென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் – அரவணைப்புடன் அறிவுரை கூறிய எம்.எஸ்.தோனி..!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற CSK – GT அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோனியின் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து தோனியின் காலில் விழுந்து வணங்கிய வீடியோ இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் அகமதாபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடரின் 59 ஆவது லீக் போட்டியில் CSK – GT அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக வெற்றிகரமாக டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்து கடின இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் குஜராத் அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் கில் அதிரடி சதங்கள் விளாசி அதிரடி காட்டினர் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 231 ரன்கள் குவித்தது . இதையடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது.

ஆரம்பம் முதல் குஜராத் பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறிய சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வந்தது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது.

இந்த போட்டியில் தோனி பேட்டிங் செய்துகொண்டிருந்தார் அப்போது மைதானத்திற்குள் நுழைந்த தோனியின் ரசிகர் ஒருவர் வேகமாக ஓடி வந்து தோனியின் காலில் விழுந்து வணங்கினார் அவரை கட்டியணைத்த தோனி ரசிகருக்கு அறிவுரை கூறினார் .இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  59 வயதில் கின்னஸ் சாதனை படைத்த 12 பேரக்குழந்தைகள் கொண்ட பாட்டி..!!

More in Featured

To Top