Connect with us

பக்தர்களை வெள்ளியங்கிரி மலைக்கு அனுமதித்திடுக – அரசுக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்

Featured

பக்தர்களை வெள்ளியங்கிரி மலைக்கு அனுமதித்திடுக – அரசுக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்

தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு வானதி சீனிவாசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறிருப்பதாவது :

கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை .

இம்மலையில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் ஏழு மலைகளை தாண்டி சிவபெருமானை மனதார தரிசித்து வருகினறனர்.

பிப்ரவரி மாதம் தொடங்கிவிட்டதால் பல்வேறு பகுதியிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர் ஆனால், தற்பொழுது பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

பக்த்தர்களின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களை மலை எற அனுமதிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் பாதுகாப்புகளையும் வனத்துறை சார்பில் அளித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தனது கடிதத்தில் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மும்பை மண்ணில் பேட்டிங்கில் தடுமாறிய ஹைதராபாத் - மும்பை அணிக்கு 174 ரன்கள் இலக்கு..!!

More in Featured

To Top