Connect with us

அட இவங்களுக்கு இவங்க தான் ஜோடியா – தளபதியின் GOAT படப்பிடிப்பில் இருந்து வந்த டக்கர் போட்டோ..!!

Cinema News

அட இவங்களுக்கு இவங்க தான் ஜோடியா – தளபதியின் GOAT படப்பிடிப்பில் இருந்து வந்த டக்கர் போட்டோ..!!

தளபதியின் அட்டகாசமான நடிப்பில் உருவாகி வரும் GOAT படத்தின் படப்பிடிப்பில் இருந்து தற்போது செம சூப்பரான போட்டோ ஒன்று வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜயின் கிளாஸான நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் திரைப்படம் THE GOAT .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தளபதியுடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர் .

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியாகி தளபதியின் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்பை பெற்றது.

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு தலத்தில் இருந்து சூப்பரான போட்டோ ஒன்று வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

புதுசேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இரண்டு முக்கிய நடிகர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது 80களில் இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்த மைக் மோகனுடன் புன்னகை அரசி நடிகை சினேகா கோட் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் தான் தற்போது செம வைரலாகி வருகிறது.

அந்த போட்டோவை கண்ட ரசிகர்கள் அப்போ இந்த படத்தில் இவருக்கு ஜோடி இவர் தானா என சொல்லி இதனை வைரலாக்கி பரப்பி வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரன் குவிப்பில் மீண்டும் சாதனை படைக்குமா SRH..? ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று RCB - SRH அணிகள் மோதல்..!!!

More in Cinema News

To Top