Connect with us

மும்பை மண்ணில் எடுபடாமல் போன SRH பந்துகள் – சூர்யகுமாரின் அதிரடி சதத்தால் வென்றது மும்பை இந்தியன்ஸ்..!!

Featured

மும்பை மண்ணில் எடுபடாமல் போன SRH பந்துகள் – சூர்யகுமாரின் அதிரடி சதத்தால் வென்றது மும்பை இந்தியன்ஸ்..!!

10 சிறப்பான தரமான அணிகளுடன் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியுள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் மும்பையில் உள்ள உலக புகழ் பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற தொடரின் 55 ஆவது லீக் போட்டியில் SRH – MI அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் பேட் கம்மனிங்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார் .

இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து கடுமையான இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் களமிறங்கினர். இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட அபிஷேக் 11 ரன்களில் ஆட்டமிழந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட் மட்டும் தனி ஆளாக அணிக்கு தேவையை ரன்களை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 173 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது.

அணியின் தொடக்க வீரர்களாக ஹிட் மேன் ரோஹித் மற்றும் சுட்டி குழந்தை இஷான் கிஷன் களமிறங்கினர்.
இலக்கை கடக்க சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் அதிரடி ஆட்டக்காரர் வந்த சூரியகுமார் யாதவ் அதிரடியில் மிரட்ட ஸ்கோர் மளமளவென உயரத்தொடங்கியது . சிறப்பாக விளையாடிய சூரியகுமார் 50 பந்துகளில் சதம் விளாசியது மட்டுமல்லாமல் அணியையும் வெற்றிபெற செய்துள்ளார்.

இந்த அட்டகாச வெற்றியின் மூலம் கடைசி இடத்தில் இருந்த மும்பை அணி ஒருபடி முன்னேறி தற்போது 9 ஆவது இடத்தில் உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top