Connect with us

டி20 உலகக்கோப்பையில் வென்றால் ஒவ்வரு வீரருக்கும் 83 லட்சம் – பாக் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நாக்வி அறிவிப்பு

Featured

டி20 உலகக்கோப்பையில் வென்றால் ஒவ்வரு வீரருக்கும் 83 லட்சம் – பாக் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நாக்வி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி வென்றால் ஒவ்வரு வீரருக்கும் 83 லட்சம் பரிசாக வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நாக்வி அறிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.

ஐபில் தொடர் முடிந்த கையோடு டி20 உலகக்கோப்பை தொடங்க உள்ளதால் இந்த தொடரின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .

டி20 உலகக்கோப்பையில் 20 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில் 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி வென்றால் ஒவ்வரு வீரருக்கும் தலா 100,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும் அதாவது இந்திய மதிப்பில் 83 லட்சம் பரிசாக வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நாக்வி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த தொடரின் மீது ஏகபோக எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நாக்வி பரிசுத்தொகை அறிவித்திருப்பது டி20 உலகக்கோப்பை தொடரின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top