Connect with us

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார்..!!

CWC23

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார்..!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் புடைசூழ ஏரளாமான கலை நிகழ்ச்சிகளுடன் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது.

இந்த இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு தொகையாக 33 கோடியும் . இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 16 கோடி பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளது.

அதேசமயம் இந்த உலகக்கோப்பை தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது . நவ.23 – டிச.3 வரை இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் உலக்கோப்பை தொடரின்போது ஹார்டிக் பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகி தற்போது ஓய்வில் உள்ளார் .

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

Advertisement
 

Trending

 
Advertisement
To Top