Connect with us

“சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்தின் 10 நாள் Box Office Collection இவ்வளவா?!”

Cinema News

“சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்தின் 10 நாள் Box Office Collection இவ்வளவா?!”

பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர், நடிகர் அருண் விஜயின் மிஷன் உள்ளிட்ட படங்கள் கடந்த 12 ம் தேதி வெளியான நிலையில் அதற்கு போட்டியாக அயலான் திரைப்படமும் களத்தில் இறங்கியது. இந்நிலையில், அயலான் திரைப்படம் உலகளவில் கடந்த 10 நாட்களில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ரவிக்குமார் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார்.

ஆஸ்கர் நாயகன் AR ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாஸ், பானுப்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சரத் கே ல்கர் வில்லனாக நடித்து இருக்கிறார். KJR ஸ்டுடியோஸ் மற்றும் 24 AM ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும் செய்துள்ளார்.

இப்படத்தில், சுமார் 4500க்கும் மேற்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளைக் கொண்டு காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 2030 – ல் பூமியில் எனர்ஜியின் தேவை பல மடங்கு அதிகமாகும் என்பதை தெரிந்து கொண்டு, பூமியின் மிக மிக ஆழத்தில் இருக்கும் ஒரு வாயுவை எடுக்க முதலீட்டாளர்களிடம் பிசினஸ் பேசுகிறான் ஆர்யன்.

அதற்கு காரணம் அவன் கையில் அப்படியான ஒரு கருவி இருக்கிறது. VFX வேலைகளும், வேற்றுக்கிரகவாசிகளின் காட்சிகளும் சுவாரஸ்யமாக உள்ளன. ஆனால் பிரமாண்டமான ஸ்டண்ட் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. படத்தின் தொழில்நுட்ப திறமை இருந்த போதிலும், இயக்குனர் ஆர். ரவிக் குமாரின் நுணுக்கமான விவரிப்பு அதை பழமையானதாக தோன்றுகிறது.

இதனை வேற்று கிரகத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கும் ஏலியன், அதன் ஆபத்தை உணர்ந்து அந்த கருவியை கைப்பற்ற பூமிக்கு வருகிறது. ஆர்யனுக்கும் ஏலியனுக்கும் நடக்க இந்த போராட்டத்தில் எதிர்பாராத விதமாக இயற்கையின் மீது காதல் கொண்ட அர்ஜூன் ஏலியனுடன் கை கோர்க்கிறான். ஒரு கட்டத்தில் ஏலியனின் சக்தி அர்ஜூனுக்கு கை மாறுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது மீதிக் கதை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேப்பாக்கத்தில் CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற SRH பந்துவீச முடிவு - கடின இலக்கை கொடுக்குமா CSK..?

More in Cinema News

To Top